/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யோகி ராம்சுரத்குமாரின் 106வது ஜெயந்தி விழா
/
யோகி ராம்சுரத்குமாரின் 106வது ஜெயந்தி விழா
ADDED : டிச 03, 2024 07:09 AM
ஓசூர்: ஓசூர் டி.வி.எஸ்., நகர் ராம்ஜி காலனியில், பகவான் யோகிராம் சுரத்குமார் பஜனை மந்திர்
உள்ளது. இங்கு அவரது, 106வது ஜெயந்தி விழா நேற்று முன்தினம் நடந்தது.
கிருஷ்ணகிரி ஆன்-மிக நிலையத்தின் அன்னை மகாலட்சுமி அம்மா தலைமை
வகித்தார். பஜனை மந்திர் தலைவர் ராம்ஜி ரத்னகுமார் வர-வேற்றார். அதிகாலை, 5:30
மணிக்கு, பகவான் யோகி ராம்சுரத்-குமார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
செய்யப்பட்-டது. காலை, 6:00 மணிக்கு, நாம ஜெபம் மற்றும் 6:30 மணிக்கு, வினோத்
நாராயணசாமி குழுவினர் நாதஸ்வரம், தவில் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடந்தது.
9:00 மணிக்கு, ராம்ஜி பஜனை குழு தலைவர் குப்புசாமி தலைமையில், பஜனை நிகழ்ச்சி
நடந்தது.காலை, 11:00 மணிக்கு, திருவண்ணாமலை எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் அனு
வெண்ணிலாவின் சொற்பொழிவு நடந்தது. இதில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின்
மூலம் தனக்கு கிடைத்த அறிய அனுபவங்களை பக்தர்களுக்கு எடுத்துரைத்தார்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தளி ஹட்கோ உமா
மகேஸ்வரியின் பரதாலயா மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஓசூர்
பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் பொதுச்செயலாளர் அண்ணாமலை
வீரப்பன், பொருளாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.