/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கிருஷ்ணகிரி வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்'
/
'கிருஷ்ணகிரி வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்'
'கிருஷ்ணகிரி வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்'
'கிருஷ்ணகிரி வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்'
ADDED : ஆக 03, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வணிகர் நல வாரியத்தில் எவ்வித கட்டணம் இன்றி நவ., 30ம் தேதி வரை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலதிட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில். மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் பேசியதாவது:
கிருஷ்ணகிரி வணிகவரி மாவட்டத்தில் உள்ள, 7 வரி விதிப்பு சரகங்களில் இதுவரை மொத்தம், 619 வணிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் அதிக உறுப்பினர்கள் பயன்பெறும் பொருட்டு, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும், 40 லட்சம் ரூபாய்க்கு கீழ் விற்று முதல் உள்ள சிறு, குறு வணிகர்கள் எவ்வித கட்டணமும் இன்றி உறுப்பினர் ஆகலாம். கட்டணத்தொகை, 500 ரூபாய் செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது,
இவ்வாறு பேசினார்.
மாவட்ட வணிகவரி இணை ஆணையர் (ஓசூர் கோட்டம்) ஜானகி, ஓசூர் கோட்டம் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் அன்புகனி, துணை ஆணையர் கலைச்செல்வி, மூர்த்தி, வணிகர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.