ADDED : செப் 28, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலை மின் நகரை சேர்ந்தவர் கவுதம்ராஜ், 32; வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, தன் வீட்டின் முன் ஹோண்டா டியோ மொபட்டை நிறுத்தியிருந்தார். இதை, வாலிபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை பிடித்த கவுதம்ராஜ், ஓசூர் டவுன் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த விஜய், 24, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபட்டை பறிமுதல் செய்தனர்.