ADDED : மே 23, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கொண்டம்பட்டி பிரிவு சாலை அருகே, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி மேல் இராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 27. இவர் நேற்று காலை 10:00 மணியளவில் பைக்கில், ஊத்தங்கரையில் இருந்து செங்கம் நோக்கி சென்றபோது,
கொண்டம்பட்டி பரிவு சாலையில், முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்த முயற்சித்ததில், டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.லாரி டிரைவர் வெங்கடேசன் தலைமறைவானார். ஊத்தங்கரை போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.