ADDED : ஜூன் 05, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே பண்ணப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மப்பா மகன் சிவராஜ், 20. விவசாயி; நேற்று முன்தினம் காலை, 8:45 மணிக்கு, பேரிகை - மாஸ்தி சாலையில் உள்ள கே.என்.,தொட்டி கிராமம் அருகே, பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றார்.
அப்போது, பேரிகை வனத்துறை சோதனைச்சாவடி அருகே வசிக்கும் சந்திரப்பா, 66, என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.