/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலையில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
/
தலையில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
ADDED : நவ 27, 2025 01:58 AM
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லம்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெய்சங்கர். இவருக்கு, 2 மனைவியர். முதல் மனைவியின் மகன் சரவணன், 32, மதுபோதையில் ஊர் சுற்றிக் கொண்டு, சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டின் அருகே, முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். காரிமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு, கை
ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், வீட்டின் மொட்டை மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சரவணனை, சிலர், தலையில் செங்கலால் தாக்கி அடித்து கொன்று விட்டு, கீழே கொண்டு வந்து, அவரது உடலின் மேல், கம்பளியை போர்த்தி விட்டு சென்றுள்ளனர். மது அருந்தும் தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

