ADDED : டிச 21, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காளேகுண்டாவை சேர்ந்தவர் சந்திரன், 29; காய்கறி வியாபாரி. இவர் கடந்த, 5 இரவு, 7:00 மணிக்கு, ஓசூர் வசந்த் நகரில் உள்ள தன் நண்பர் மோகன் வீட்டின் முன் தன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலை பார்த்த போது, மர்ம நபர் புல்லட்டை திருடி சென்றி-ருந்தார்.
சந்திரன் கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் விசாரித்தனர். இதில், தேன்கனிக்கோட்டை அடுத்த உள்ளுகுறுக்கை கிராமத்தை சேர்ந்த அப்துல்லா, 24, புல்லட்டை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், புல்லட்டை பறிமுதல் செய்தனர்.

