sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் ஸ்டேஷனில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மனு : அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

/

போலீஸ் ஸ்டேஷனில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மனு : அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் ஸ்டேஷனில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மனு : அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் ஸ்டேஷனில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மனு : அரசு தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜூலை 14, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக சென்றவர் இறந்ததற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, அரசு தரப்பு பதில் மனு செய்ய உத்தரவிட்டது.



மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த பூமயில் தாக்கல் செய்த ரிட் மனு: கணவர் மார்க்கண்டேயன் கட்டட காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.

மகள் சந்தானகவுரியை மே 26 முதல் காணவில்லை. ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். மகளை உறவினர் ஒருவர் கடத்தியதாகவும் குறிப்பிட்டார். போலீசார், மகளை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. ஜூன் 1ல் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். இதற்காக ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு அவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்தனர். அவர் ஸ்டேஷனில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. போலீஸ் சித்ரவதை காரணமாக கணவர் இறந்திருக்கலாம். அரசு ரூ.பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கணவர் இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.முருகானந்தம் ஆஜரானார். இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு சிறப்பு பிளீடர் எம்.கோவிந்தனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூலை 18க்கு தள்ளிவைத்தார்.










      Dinamalar
      Follow us