/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி
/
நெல் விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி
ADDED : டிச 01, 2025 05:33 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாவாரி கண்மாய் பகுதிகளில் ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் நெல் நடவு செய்துள்ளனர். பலர் நாற்றுப் பாவி உள்ளனர். அவர்களில் ஏராளமானோர் மழை பெய்தால் நடவு செய்வது, இல்லையெனில் நாற்றுக்களை விற்பது என முடிவெடுத்து இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மழை பெய்து வருவதால் நெல் பயிருக்கு மிகவும் பயனுள்ளதாக, நாற்றுகள் செழிப்பாக வளர உதவும். மேலும் குறிப்பிட்ட நாளில் நாற்றுக்களை நடவு செய்து விடலாம்.
நாற்றுப் பாவ நிலங்களை தயார் செய்தும் வருகிறோம் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

