ADDED : டிச 01, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரையில் 14வது ஜூனியர் ஹாக்கி ஆண்கள் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் மதுரை வந்தனர்.
இவ்வீரர்களை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மாலை அணிவித்து வரவேற்றனர். விமான நிலைய வளாகத்தில் கூடியிருந்த மாணவர்கள், ஹாக்கி வீரர்கள் தேசியக்கொடிகளை அசைத்து இந்திய ஹாக்கி வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர். பின்பு கரகாட்டம், தப்பாட்டம் ஒயிலாட்டத்துடன் கலைஞர்கள் வரவேற்றனர்.

