/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
/
கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமின் : ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஜூலை 12, 2011 12:15 AM
மதுரை : மதுரையில் வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்பாண்டியை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 2009 பிப்., 20ல் கொலை செய்ததாக மதிச்சியம் போலீசார் கைது செய்தனர். ராதாகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஐயாயிரமும் விதித்து முதன்மை செஷன்ஸ் கோர்ட் 2010 செப்., 30ல் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமினில் விடவும் கோரினார்.மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது யூசுப் ஆஜரானார். நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஜி.எம்.அக்பர் அலி பெஞ்ச், மனுதாரருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, உத்தரவிட்டது. அவருக்கு ஜாமின் வழங்கிய பெஞ்ச், ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் வேலை நாளன்று, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்தது.