/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலில் விழுந்து கெஞ்சியும் மகள் வர மறுத்ததால் தந்தை மயக்கம்
/
காலில் விழுந்து கெஞ்சியும் மகள் வர மறுத்ததால் தந்தை மயக்கம்
காலில் விழுந்து கெஞ்சியும் மகள் வர மறுத்ததால் தந்தை மயக்கம்
காலில் விழுந்து கெஞ்சியும் மகள் வர மறுத்ததால் தந்தை மயக்கம்
ADDED : ஜூலை 12, 2011 12:14 AM
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணின், காலில் விழுந்து கெஞ்சியும் வர மறுத்ததையடுத்து, தந்தை மயங்கி விழுந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் களஞ்சிப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில், ''மகள் வளர்மதி(24) ஜூன் 15ல் காணாமல் போனார். அவரை சதீஷ் என்பவர் திருமணம் செய்ய கடத்தியதாக தெரிகிறது. அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்,'' என கோரினார்.மனு நேற்று நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், அவரது மனைவி நேரில் ஆஜராயினர். வளர்மதி, சதீஷ் ஆகியோரை போலீசார், அரசு வக்கீல் சி.ரமேஷ் மூலம் ஆஜர்
படுத்தினர். மகளுடன் பேச வேலுச்சாமிக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியது. அப்போது தன்னுடன் வரும்படி வேலுச்சாமியும், அவரது மனைவியும் காலில் விழுந்து கெஞ்சியும் வளர்மதி மறுத்து விட்டார். அதிர்ச்சியுற்ற வேலுச்சாமி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஐகோர்ட் கிளை டாக்டர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின், வளர்மதி அவரது விருப்பப்படி சதீஷூடன் செல்லலாம், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.