sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வைகையில் குவாரி துவங்க எதிர்த்து மனு :தற்போதைய நிலை தொடர உத்தரவு

/

வைகையில் குவாரி துவங்க எதிர்த்து மனு :தற்போதைய நிலை தொடர உத்தரவு

வைகையில் குவாரி துவங்க எதிர்த்து மனு :தற்போதைய நிலை தொடர உத்தரவு

வைகையில் குவாரி துவங்க எதிர்த்து மனு :தற்போதைய நிலை தொடர உத்தரவு


ADDED : ஜூலை 15, 2011 01:30 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் பாப்பாகுடி வைகையாற்றில் மணல் குவாரி துவங்குவதை எதிர்த்து தாக்கலான பொது நல மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, தற்போதைய நிலை தொடர கலெக்டருக்கு உத்தரவிட்டது.

பாப்பாகுடி கே.பி. மணல்மேட்டை சேர்ந்த வக்கீல் ராஜா தாக்கல் செய்த பொது நல மனு: பாப்பாகுடியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெத்தனேந்தல் கண்மாய் மூலம் பெறப்படுகிறது. இக்கண்மாய்க்கு வைகையில் இருந்து தண்ணீர் வரும். தேளி, செல்லப்பனேந்தல், பாப்பாகுடியில் 700 ஏக்கர் நிலங்கள் வைகையை நம்பியுள்ளன. வைகையில் 7000 தேக்கு மரங்கள் நடப்பட்டன. அந்த மரங்களை வெட்டி விட்டு வைகையில் மணல் குவாரி நடத்தவும் திட்டமிடப்படுகிறது. மரங்களை நட வனத்துறை பெரிய தொகையை செலவிட்டது. குவாரி நடத்தினால் நிலத்தடி நீர் குறையும். மணலூர், அருப்புக்கோட்டை, அல்லிநகரம், திருப்புவனம் புதூர், மடப்புரம் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். பாப்பாகுடி, தேளி, செல்லப்பனேந்தல் வைகையாற்று பகுதியில் குவாரி துவங்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கண்ணன், பழனிச்சாமியும், அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் மகேந்திரனும் ஆஜராயினர். நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, சுந்தரேஷ் பெஞ்ச், மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதிலளிக்க கலெக்டர், பொது பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், கனிம வள உதவி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டது.








      Dinamalar
      Follow us