sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேராசிரியர் பற்றி புகார் கூறியவர்கள்மீது நடவடிக்கைக்கு கோரிக்கை

/

பேராசிரியர் பற்றி புகார் கூறியவர்கள்மீது நடவடிக்கைக்கு கோரிக்கை

பேராசிரியர் பற்றி புகார் கூறியவர்கள்மீது நடவடிக்கைக்கு கோரிக்கை

பேராசிரியர் பற்றி புகார் கூறியவர்கள்மீது நடவடிக்கைக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 13, 2011 04:08 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் லெட்சுமணன் அறிக்கை:மதுரை காமராஜர் பல்கலையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் மீது சிலர் பொய் புகார்கள் கூறுகின்றனர்.

இவர்களால் பல்கலை வளர்ச்சி தடைபடுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்கலை பேராசிரியர் ஜெயராமன் மீது சிலர் புகார் கூறினர். இதனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது பற்றி விசாரித்த முன்னாள் ஐகோர்ட் நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம், ''புகார்களில் உண்மை இல்லை'' என அறிக்கை சமர்ப்பித்தார்.பல்கலை சிண்டிகேட் இதை ஏற்று, ஜெயராமனை மீண்டும் தொழில் முனைவோர் துறை தலைவர் பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தது. அவரும், 2009ல் பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு கிடைக்க வேண்டிய பணி உயர்வு, ஊதிய நிலுவை அளிக்கப்படவில்லை.இதை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜூன் 8 ல் வழங்கிய தீர்ப்பில், 'அவருக்குரிய அனைத்து பணப்பயன்களையும் வழங்க' உத்தரவிட்டது. இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us