/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் வளத்தில் பின்தங்கிய மதுரை தெற்கு பகுதிகள்
/
தொழில் வளத்தில் பின்தங்கிய மதுரை தெற்கு பகுதிகள்
ADDED : ஆக 30, 2011 03:07 AM
மதுரை:மதுரை வைகை தெற்கு பகுதி தொழில் வளத்தில் பின்தங்கியுள்ளது.
இப்பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மதுரை வடக்கில் நகரி, புதூர், உறங்கான் பட்டியில் தொழிற்பேட்டைகள் செயல் படு கின்றன.நகரியில் ரப்பர், பிளாஸ்டிக்,பேவர்பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், சிறு தொழில்கள் உள் ளன. சோழவந்தானில் தென்னை அதிகமிருப்பதால் கயிறு சார்ந்த தொழில்கள் நடக்கின்றன. ஒத்தகடை பகுதிகளில் எவர்சில்வர் பாத்திர தயாரிப்பு உள்ளது. மேலூர் ரோட்டில் பூவந்தி வரை கிரானைட் தொழிற்சாலைகள் செயல்படு கின்றன. தென்பகுதியில் கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை மட்டும் உள்ளது.திருமங்கலம் ரோட்டில் கார் சர்வீஸ், ஆட்டோமொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் உள்ளன.கோச்சடையில் மினரல் வாட்டர் பிளான்ட்கள் செயல்படு கின்றன. மதுரையிலேயே அதிகளவில் சிறுதொழில்கள் நடக்குமிடம் ஜெய்ஹிந்துபுரம் தான்.இன்ஜினியரிங்,ஸ்டவ்,வாசர், அப்பளம் தயாரிப்பு இங்கு அதிகம்.கீழவெளி வீதி தாண்டி சிந்தாமணி ரோடு,நெடுங்குளம் வரை அரிசி ஆலைகள் அதிகம். இவற்றை மேம்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தென் பகுதியிலுள்ள கள்ளிக்குடி, டி.கல்லுப் பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் தொழில்கள் இல்லை. விவசாயமும் அவ்வவ்போது பொய்த்து விடுகிறது. கிராமப்புறங்களில் தொழில் வளம் ஏற்பட்டால் தான், நகர்ப்புற நெரிச லும், வேலைவாய்ப்பு போட்டியும் குறையும். மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மருதப்பன்,யு.ஒய். இ.ஜி.பி., திட்டத்தில் கிராமப்புற இளைஞர் கள் சிறு அளவில் தொழில் துவங்கலாம்.உற்பத்திக்கு ரூ.5 லட்சம், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வணிகம் செய்ய ரூ.ஒரு லட்சம் கடன் தரப்படுகிறது. 15 சதவீத மானியம் உண்டு. தொழிற் பயிற்சி பெற்றவர் கள் நேரில் அணுகலாம். பெருங்குடி ரூட்செட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற பதிவு செய்யலாம்,'' என்றார்.

