sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்

/

உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்

உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்

உணவு பாதுகாப்புச் சட்டத்தில்திருத்தம் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஆக 30, 2011 03:16 AM

Google News

ADDED : ஆக 30, 2011 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தில், திருத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்,' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி யுள்ளது.சங்க மனு: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப் பாட்டு கமிஷன் 'உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்ட'த்தை அமல்படுத்தி யுள்ளது.இது உணவுப் பொருள் தயாரி ப்பாளர், விற்பனையாளர்களை பாதிக்கும் கடும் நிபந்தனைகள், கடைபிடிக்கமுடியாத நடைமுறைகளை உள்ளடக் கியது.தெரு வணிகர் கள்,உணவுப் பொருள் வர்த்தகர்கள், உணவுப் பதனீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள் ளவர்கள் பதிவு அல்லது உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என நிபந்தனையுடன் மீண்டும் 'லைசென்ஸ் ராஜ்யம்' அமலா கியுள்ளது.இச்சட்டத்தால் கலப்படம் தடுக்கப்படுவதைவிட, லஞ்சம் பெருகும்.

வணிகர்கள் வேளாண் சார்ந்த தொழிலை விட்டு ஓடிவிடுவர்.செலவு அதிகரித்து,பொருட்களின் விலை கூடும். விவசாயிகள் பாதிக்கப்படுவர். வளர்ந்த நாடுகளில் மட்டுமே இக்கட்டுப்பாடுகளை பின்பற்ற முடியும். சில்லரை வணிகத்தில், 20 கோடி பேரின் வாழ்வாதாரத்தை பறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டுதலால் கடும் நிபந்தனைகள் இப்புதிய சட்டத் தில் இடம் பெற்றுள்ளன.இதில் திருத்தங்கள் செய்ய, முதல் மூன்று ஆண்டுகள் சட்டம் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 2014 ஏப்ரலுக்கு பின், சட்டத்தை அமலாக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us