/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
-- அ.தி.மு.க., அ.ம.மு.க., மோதல்: 3 பேர் காயம்
/
-- அ.தி.மு.க., அ.ம.மு.க., மோதல்: 3 பேர் காயம்
ADDED : நவ 11, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டியில் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார்.
கூட்டம் முடிந்து உதயகுமார் சென்று விட்டார். பின் கட்சியினர் மங்கல்ரேவு விலக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது அ.ம.மு.க., வை சேர்ந்த மங்கல்ரேவு பழனிச்சாமி, அஜய் உள்ளிட்ட பலர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களை தாக்கினர். இதில் அ.தி.மு.க., வை சேர்ந்த உசிலம்பட்டி விஷ்ணு 18. அபினேஷ் 23. தினேஷ்குமார் 28, காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.