ADDED : ஆக 08, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஆரப்பாளையம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கேரம் போட்டிகளை மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி நடத்தியது.
ஆடவர் போட்டி முடிவுகள்:
14 வயது ஒற்றையர் பிரிவில் எம்.கே. பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி முதலிடம், குட் ெஷப்பர்டு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
14 வயது இரட்டையர் பிரிவில் எம்.கே. பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ பள்ளி ௨ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் எம்.கே. பள்ளி முதலிடம், சிவகாசி நாடார் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது பிரிவில் சிவகாசி நாடார் பள்ளி முதலிடம், எம்.கே. பள்ளி இரண்டாமிடம் பெற்றன.