ADDED : ஜூலை 15, 2011 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த சங்கர் (19) மற்றும் அவரது நண்பர்கள் பெண்களை கேலி செய்தனர். இதை தட்டிக்கேட்ட மகாலிங்கத்தை கத்தியால் குத்தினர். சங்கர், வீரநாகேந்திரன் (17), வீரமணி (18), அக்னி வீரபுத்திரன் (18), சங்கையா (19)வை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

