ADDED : நவ 01, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: ஏடிமங்கலத்தில் கொட்டாம்பட்டி வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடந்தது.
மதுரை துணை வேளாண் இயக்குனர் ராணி தலைமை வகித்து நெற்பயிர் சாகுபடி ஒருங்கிணைந்த பயிர், உர நுண்ணுாட்ட சத்து மேலாண்மை முறைகள், விதை நேர்த்தி குறித்து பயிற்சி அளித்தார். உதவி இயக்குனர் சுபாஷ்சாந்தி பயிர் காப்பீடு, அடையாள எண் பதிவு குறித்து விளக்கினார்.
துணை, உதவி வேளாண் அலுவலர்கள் ரகுராமன், பாலசுப்பிரமணியன், தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்தியகீர்த்தனா, பயிர் அறுவடை சோதனை அலுவலர் சேதுபதி, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

