sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சீட்டு விளையாட்டில் "செக்' மூலம் பணம் பட்டுவாடா

/

சீட்டு விளையாட்டில் "செக்' மூலம் பணம் பட்டுவாடா

சீட்டு விளையாட்டில் "செக்' மூலம் பணம் பட்டுவாடா

சீட்டு விளையாட்டில் "செக்' மூலம் பணம் பட்டுவாடா


ADDED : ஜூலை 13, 2011 04:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர்:பணம் வைத்து சூதாடியவர்கள் ஒரு கட்டத்தில் 'செக்' கொடுத்து விளையாட, சுற்றி வளைத்த மேலூர் போலீசார் 12 பேரை கைது செய்து பணம், மொபைல் போன்கள் மற்றும் டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி வேம்புலி கண்மாயில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் சென்ற போலீசார் நள்ளிரவு 1.30 மணிக்கு அவர்களை சுற்றி வளைத்தனர்.

காஸ் மூலம் இயங்கும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் அவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.அவர்களிடமிருந்து 44 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கம், 25 ஆயிரத்து 400க்கு பெயர் போடாத செக், 13 மொபைல் போன்கள், எட்டு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீட்டு விளையாடிய மதுரையை சேர்ந்த உக்கிரபாண்டியன்(43), பொன்னுசாமி(52), செல்லூரைச் சேர்ந்த மாரி(30), குமார்(28), பால்பாண்டி(45), பாலமேட்டை சேர்ந்தசரவணன்(30), கிருஷ்ணன்(33), மேலூரை சேர்ந்த மணிகண்டன்(35), ராமு(36), அரிட்டாபட்டியை சேர்ந்த இளமாத்தான்(46), அழகர்கோவிலை சேர்ந்த ராசு(37), சிவகங்கையை சேர்ந்த அழகர்சாமி(40) என 12 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.






      Dinamalar
      Follow us