
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே ஒத்தவீடு கிராமத்தில் ஆதிசக்தி விநாயகர், நொண்டி சுவாமி, பேச்சியம்மன், கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஒத்தவீடு மூன்று கரை, கிடாரிப்பட்டி மற்றும் அழகாபுரி 40 வீட்டு பங்காளிகள், திருப்பணி குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.

