/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை இணைத்ததால் வேளாண் அதிகாரிகளுக்கு பணிச்சுமை தாங்க முடியலை
/
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை இணைத்ததால் வேளாண் அதிகாரிகளுக்கு பணிச்சுமை தாங்க முடியலை
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை இணைத்ததால் வேளாண் அதிகாரிகளுக்கு பணிச்சுமை தாங்க முடியலை
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களை இணைத்ததால் வேளாண் அதிகாரிகளுக்கு பணிச்சுமை தாங்க முடியலை
ADDED : ஆக 29, 2024 05:40 AM
மதுரை: வேளாண் துறையில் மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களுக்கு ஒரே உதவி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளதால் இரட்டைச் சுமை ஏற்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் வேளாண், தோட்டக்கலைத் துறையின் கீழ் உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கீழ் வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2018 ல் மதுரை மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு ஒரே உதவி இயக்குநர் என மாற்றம் செய்யப்பட்டது. அதேநேரம் இன்சூரன்ஸ் திட்டத்திற்கென உதவி இயக்குநர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது முதல் மதுரை கிழக்கு, மேற்கு உதவி இயக்குநராக பணிபுரிபவர்கள் இரட்டை சுமைக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டது.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
தோட்டக்கலைத் துறையுடன் ஒப்பிடும் போது வேளாண் துறையின் மதுரை கிழக்கில் 6000 எக்டேர், மேற்கில் 5500 எக்டேரில் நெல் பிரதான பயிராகவும், 100 எக்டேரில் பிற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மதுரை மேற்கு ஒன்றியத்தின் கீழ் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. வேளாண் விரிவாக்க மையங்கள், துணை மையங்கள் உள்ளன.
இரண்டு ஒன்றியங்களுக்குமான அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, விவசாய நிலங்களை கண்காணிப்பது, கண்காட்சி நடத்துவது, மண் பரிசோதனை மாதிரிகளை கண்காணிப்பது வரை ஒரே உதவி இயக்குநரே செய்ய வேண்டியுள்ளது.
இரண்டு ஒன்றியங்களையும் கண்காணித்தாலும் ஒரு ஒன்றியத்திற்கான கணக்கில்தான் டீசல் அலவன்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலவானால் உதவி இயக்குநரே ஏற்க வேண்டும்.
அதேசமயம் தோட்டக்கலைத்துறையில் மதுரை கிழக்கு, மேற்கு என 2 ஒன்றியங்களை சேர்த்தாலும் மொத்தமே 2 ஆயிரம் எக்டேர் பரப்பளவே சாகுபடியாகிறது. அங்கு 2 உதவி இயக்குநர்கள் உள்ளனர்.
இந்த பணிச் சுமையால் மதுரை கிழக்கு, மேற்கில் உதவி இயக்குநர் பணியிடத்திற்கு வர அதிகாரிகள் தயங்குகின்றனர்.
2018 க்கு முன்பிருந்ததைப் போல மீண்டும் தனித்தனி உதவி இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.