/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாகா காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் இயற்கை கப் சாம்பிராணிகள்
/
நாகா காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் இயற்கை கப் சாம்பிராணிகள்
நாகா காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் இயற்கை கப் சாம்பிராணிகள்
நாகா காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் இயற்கை கப் சாம்பிராணிகள்
ADDED : அக் 01, 2025 12:00 AM
மதுரையில் 2002 முதல் நாகா காட்டேஜ் இன்டஸ்ட்ரீஸ் இயங்கி வருகிறது. எங்களின் உயர்தர தயாரிப்பான, பூஜைக்கு உகந்த இயற்கை நறுமணம் மிகுந்த உடனடி கப் சாம்பிராணிகளை, இயற்கை மூலப் பொருட்களை கொண்டே தயார் செய்கிறோம். அண்ணாமலையார்ஸ் ரமணா துாப் கோன், அண்ணாமலையார்ஸ் ரமணா பால் சாம்பிராணி என்ற பெயரில் விற்பனை செய்கிறோம்.
இதற்காக, இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குலியம், அல்மண்ட் டிராப் போன்ற மூலப்பொருட்களை தமிழகத்தின் நேரடி இறக்குமதியாளர்களிடம் பெற்று உற்பத்தி செய்கிறோம். எங்களின் தயாரிப்புகள், உடலுக்கு மறைமுகமாக கேடு விளைவிக்கும் எவ்வித வேதி பொருட்களும், வாசனை திரவியங்களும் கலக்காதது.
வாசனை திரவியங்கள் பயன்படுத்திய உடனடி கப் சாம்பிராணிகள், அதன் பாக்கெட்டுகளை முகர்ந்தாலே வாசனையை உணரலாம். ஆனால் இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயார் செய்த கப் சாம்பிராணிகள், நெருப்பில் பற்ற வைத்தால் மட்டுமே நறுமணத்தை வெளிப்படுத்தும். மழை, குளிர் காலங்களில் பரவும் வைரஸ் கிருமிகளை அழித்து உடலுக்கு நன்மை பயக்கும்.
-- நா.பாலச்சந்திரன் 99525 04407