ADDED : அக் 01, 2025 12:01 AM
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் 1945 ல் துவங்கி 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில், பல்வேறு சட்டங்கள் இருக்கும் காரணத்தால் சட்டங்களை ஒருங்கிணைத்து வணிகம், தயாரிப்புகள் சிறப்பாக இருப்பதற்காக மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை 2011லும், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை 2017 லும் அமல்படுத்தினர்.
நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களில் பல்வேறு குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினோம். தமிழகத்தில் இருந்து டில்லி செல்வது மிகஅதிக துாரமாக இருந்தாலும், தயாரிப்பாளர்களையும், வணிகர்களையும் காப்பதற்காகவும், பொதுமக்களுக்கு ஏற்படும் வரிச் சுமையை குறைப்பதற்காகவும் பலமுறை டில்லி சென்று முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, தற்போதைய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோரை பலமுறை சந்தித்ததன்பலனாக இச்சட்டத்தில் பெரிய மாறுதல்கள் நடந்து வருகின்றன.
எங்கள் சங்க சேவையை உணர்ந்தும், எங்கள் நியாயமான வேண்டுகோளை ஏற்றும், செப்.19 ல் நடந்த சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டரை மணி நேரம் பங்கேற்றார்.
கடந்த செப்.25ல் எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா சங்க நிர்வாகிகளுடன் 30 நிமிடங்கள் விவாதித்து, மீண்டும் 30 நாட்கள் கழித்து கூட்டம் நடத்தி, குறைகளை தீர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி வணிகர்கள், விவசாயிகள், தயாரிப்பாளர்ளுக்காக சேவை செய்வது உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம்.