/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
40 ஆண்டு வாழ்வாதாரம் இழக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
/
40 ஆண்டு வாழ்வாதாரம் இழக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
40 ஆண்டு வாழ்வாதாரம் இழக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
40 ஆண்டு வாழ்வாதாரம் இழக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
ADDED : அக் 01, 2025 06:35 AM

திருமங்கலம், : திருமங்கலம் ரோட்டோரத்தில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
திருமங்கலம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் முன்சீப் கோர்ட் ரோட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மதுரை ரோட்டை பார்த்தவாறு இருந்த பழைய அலுவலகத்தின் முன் பகுதியில் ரூ.1.50 கோடி செலவில் 27 கடைகள் கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்கு முடிவு செய்து பணிகள் நடக்கின்றன.
இந்தக் கடைகளில் வாசலில் தமிழ்நாடு கதர் கிராம தொழில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியங்கள் வழங்கிய சிறிய பெட்டி கடைகள் செயல்படுகின்றன. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக இக்கடைகள் மூலம் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தன. இதன் மூலம் அவர்கள் குடும்பம் ஓரளவு பசியாறி வந்தனர். இந்நிலையில் புதிதாக நகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு இருப்பதால் அதன் திறப்பு விழாவுக்கு முன்பு கடைகளை காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம், வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.