/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டி வியாபாரிகள் சங்கம் நன்றி
/
ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டி வியாபாரிகள் சங்கம் நன்றி
ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டி வியாபாரிகள் சங்கம் நன்றி
ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டி வியாபாரிகள் சங்கம் நன்றி
ADDED : அக் 01, 2025 06:48 AM
மதுரை : ஜி.எஸ்.டி., வரியில் உள்ள குறைகளை களைவதற்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அமைக்கப்படும் மூன்றாவது ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டிக்கு, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில் இருந்து ஒரு உறுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சங்கம் சார்பில் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
சென்னை - புதுச்சேரி தலைமை கமிஷனர், மாநில வணிக வரித்துறை கமிஷனர் இணைந்து இந்த கமிட்டியை அமைக்கின்றனர். வணிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தெரிவித்து வந்தோம். அந்த காரணத்தால் 11 உறுப்பினர்கள் உள்ள மூன்றாவது ஜி.எஸ்.டி., குறைதீர் (ரிட்ரஸல்) கமிட்டியில் எங்கள் சங்கம் சார்பில் ஒரு உறுப்பினர் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.