ADDED : ஜூன் 16, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வைகை ஹாக்கி அகாடமி சார்பில் எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் மகளிருக்கான இலவச ஹாக்கி பயிற்சி நடந்தது.
10 முதல் 20 வயதுக்குட்பட்ட மகளிர் தினமும் காலை 6:30 முதல் 8:30 மணி வரை பயிற்சி பெற்றனர். கப்பலுார் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாயன், பயிற்சியாளர்கள் நடராஜன், கார்த்திகேயினி பயிற்சி அளித்தனர்.
40 நாட்கள் பயிற்சியில் 50 பேர் பங்கேற்றனர். நிறைவு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன் சான்றிதழ் வழங்கினர்.