ADDED : ஆக 22, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சுயநிதிப்பிரிவு வணிக நிர்வாகவியல் துறை சங்கம் துவக்கவிழா, ஆளுமை திறன் மற்றும் தொடர்பு திறன் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் ஜெயஜோதி வரவேற்றார். மதுரை கல்வி குழுமத்தின் கெய்சா அனிதா, பிபின்குமார், நவநீத கிருஷ்ணன் பேசினர். இறுதியாண்டு வணிகவியல் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் இந்துமதி, மனோராஜன் ஏற்பாடுகள் செய்தனர்.