ADDED : ஆக 15, 2024 05:23 AM

கொட்டாம்பட்டி : வலைச்சேரிபட்டி பெரியநாயகி அம்மன் கோயில் ஆடிமாத புரவி எடுப்பு திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
இத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஜூலை 30 முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். 3 நாள் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் சவுக்கையில் (புரவிகள் செய்யும் இடம்) இருந்து பெரியநாயகி அம்மன், சின்ன, பெரிய கருப்பு, மலையாண்டி சுவாமி சிலைகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
நேற்று சுவாமி சிலைகள் மற்றும் நேர்த்திக்கடன் புரவிகளை பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு பக்தர்கள் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வலைச்சேரிபட்டி கிராமம் சார்பில் செய்த 2 புரவிகளை இடைமலை மற்றும் வல்லக்குடி அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
இன்று(ஆக.,15) அம்மன் ஊருணியில் எருதுக்கட்டும் விழா நடைபெறும். இதில் வலைச்சேரிபட்டி, கொட்டாம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பர்.