ADDED : ஆக 22, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லுாரியில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி நடந்தது.
முதல்வர் சாந்தி தேவி தலைமை வகித்தார்.
ஆங்கில துறைத் தலைவர் வேணுகா முன்னிலை வகித்தார்.
அதிவீரபாண்டியன் வரவேற்றார்.
துணை முதல்வர் சுப்புலட்சுமி பேசினார்.
நடுவர்களாக நந்தினி, பிருந்தா, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.
இணைப் பேராசிரியர் பூங்கோதை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.