/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானியத்தில் கிடைக்குது வேளாண் உபகரணங்கள்
/
மானியத்தில் கிடைக்குது வேளாண் உபகரணங்கள்
ADDED : மே 21, 2024 06:53 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் தேவைக்காக கடப்பாறை, மண்வெட்டி, களைக்கொத்து உள்ளிட்ட பண்ணை உபகரணங்கள், பேட்டரி மூலம் இயங்கும் மின்கல தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட பொருட்கள் திருப்பரங்குன்றம் மற்றும் பெருங்குடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உயிர் உரங்கள்: களர் நிலங்களை சீரமைக்க ஜிப்சம், நெல்லுக்கு அத்தியாவசியமான நெல் நுண்ணுாட்ட உரம், திரவ உயிர் உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதல் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருப்பினும் பிற கிராம விவசாயிகளும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அல்லது திருநகர் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம் என உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

