ADDED : ஆக 14, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி நடத்தியது.
ஆடவர் 14 வயது, 17, 19 வயது பிரிவு போட்டிகளில் கே.பெருமாள்பட்டி அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது. 14 வயது பிரிவில் நாடார் சரஸ்வதி பள்ளி 2ம் இடம், 17, 19 வயது பிரிவில் ஏ.பூச்சிப்பட்டி அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன. மகளிர் 14 வயது, 17, 19 வயது பிரிவுகளில் கே.பெருமாள்பட்டி அரசுப் பள்ளி முதலிடம், ஆர்.சி.எல்.எப். பள்ளி 2ம் இடம் பெற்றன.