நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:கமுதி அருகே பூலிப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் 27.
இவரது சகோதரி மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரை நேற்று பார்க்க வந்த பால்ராஜ், எஸ்.ஐ.,போல் நடித்து மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்ட் பூக்கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டினார். சந்தேகப்பட்டு அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

