ADDED : ஆக 29, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் காமாட்சிபுரம், கள்ளிக்குடி ஊராட்சி குளத்துவாய்பட்டி கிராம மக்கள் ரேஷன் வாங்க சமத்துவபுரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
காமாட்சிபுரத்தைச் சேர்ந்த 56 பேர் நுாறு நாள் வேலை திட்டத்திற்கு சென்றனர். மதிய உணவு இடைவேளையின்போது ரேஷன் வாங்க 30 பேர் சென்றனர். அவர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து சம்பளத்தை நிறுத்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறினர். இதை கண்டித்து நேற்று கிராம மக்கள் 25 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

