/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குரூப் 2 தேர்வில் 10,789 பேர் ‛'ஆப்சென்ட்'
/
குரூப் 2 தேர்வில் 10,789 பேர் ‛'ஆப்சென்ட்'
ADDED : செப் 15, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு 42 ஆயிரத்து 895 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மதுரை வடக்கில் 52 பள்ளிகளிலும், மதுரை தெற்கில் 43, மேலுார் 11, திருப்பரங்குன்றம் 26, உசிலம்பட்டியில் 14 பள்ளிகள் என மொத்தம் 146 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ. சக்திவேல், 5 துணை கலெக்டர்கள் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தாசில்தார்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் கண்காணித்தனர். 32 ஆயிரத்து 106 பேர் தேர்வெழுதினர். 10 ஆயிரத்து 789 பேர் 'ஆப்சென்ட்' ஆயினர்.