/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ்கள் மோதல் 12 பயணிகள் காயம்
/
அரசு பஸ்கள் மோதல் 12 பயணிகள் காயம்
ADDED : செப் 17, 2024 05:19 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
சோழவந்தான் அருகே இரும்பாடி பன்னிமுட்டி முனியாண்டி கோயில் பகுதியில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கருப்பட்டி சென்ற அரசு பஸ்சை டிரைவர் மேலக்கால் முருகன் 30, ஓட்டினார். அப்போது எதிரே தற்காலிக டிரைவர் ஒருவர் கருப்பட்டியில் இருந்து பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஓட்டிச் சென்ற அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் 12 பயணிகள் சிறுசிறு காயமடைந்தனர்.
அவர்களில் பாலகிருஷ்ணாபுரம் பாக்கியம் 60, அம்மச்சியாபுரம் நாகராஜ் 55, துரைப்பாண்டி 61, ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதித்த பயணிகள் கூறுகையில், ''தற்காலிக டிரைவர் அலைபேசியில் பேசியபடி பஸ் இயக்கியதே காரணம். மேலும் குறுகலான இந்த சாலையின் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும், சாலையோர பள்ளங்களில் வாகனம் கவிழ்வதும் தொடர்கிறது. சாலையை விரிவாக்கம் செய் வேண்டும்'' என்றனர்.