ADDED : ஆக 26, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்,  தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவன மலர் சாகுபடி திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு மல்லிகைக் கன்றுகள்  சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்  நடந்தது.
தாவரவியல் துறை பேராசிரியர், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் வரவேற்றார். தமிழக மலர் சாகுபடி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த்ராஜ், தொழில்நுட்ப விளக்கம் அளித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதி   விவசாயிகளுக்கு 1.60 லட்சம் மல்லிகைக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மாணவர் சின்னக்கருப்பன் நன்றி கூறினார்.

