ADDED : ஜூலை 04, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வருகை புறப்பாடு என, 19 விமான சேவைகள் பாதிக்கபட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான அபுதாபி மற்றும் கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. மழை நின்றபின் சென்னை திரும்பின.
சென்னையில் தரையிறங்க வேண்டிய மும்பை, ஹைதராபாத், கோவா, விஜயவாடா உள்ளிட்ட ஐந்து விமானங்கள் வானில் வட்டமடித்தன. மழை நின்றபின் தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து கோல்கட்டா, டில்லி, மும்பை, அபுதாபி உட்பட 12 விமானங்கள் தாமத மாக புறப்பட்டு சென்றன.