/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
/
நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
ADDED : மார் 11, 2025 08:48 AM
மதுரை : மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 19 பேருக்கு தொழில் நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், ஈரோடு, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் பட்டயப்படிப்பு கல்வித்தகுதியுடன் 5 ஆண்டுகள் பணிமுடித்து, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 1, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 2 ஆக பணியாற்றிய 19 பேருக்கு தொழில்நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுரையில் 11 பேர், சேலம் 5, ஈரோடு 2, ஓசூர் 1 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ளார். மாநகராட்சி அலுவலகங்களில் பதவி உயர்வுக்காக காத்திருந்த நிலையில் இந்நடவடிக்கையை அலுவலர்கள் வரவேற்றுள்ளனர்.