ADDED : மே 02, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உசிலம்பட்டி சந்தைக்குள் செல்லும் வழியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள கடையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த கீழப்புதுார் கருத்தப்பாண்டி 48, தங்கப்பாண்டி 38, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் பதுக்கி வைத்திருந்த 1300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

