/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரு பூத்திற்கு 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
/
ஒரு பூத்திற்கு 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஒரு பூத்திற்கு 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஒரு பூத்திற்கு 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 01, 2024 05:44 AM
மதுரை : மதுரை தொகுதியில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் 2751 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒரு நோட்டா பொத்தானும் சேர்த்து 16 பேருக்குத்தான் ஓட்டளிக்க முடியும். கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் அதனுடன் கூடுதலாக ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் இணைக்கப்பட வேண்டும்.
மதுரை தொகுதியில் 21 வேட்பாளர்கள் உள்ளதால் கூடுதலாக ஒரு இயந்திரம் இணைக்கப்பட உள்ளது. ஏற்கனவே 2751 ஓட்டுப்பதிவு இயந்திரம், அதற்கான கன்ட்ரோல் யூனிட்கள், அதனுடன் ஓட்டளித்த விவரத்தை பதிவிடும் விவிபேட் எனும் இணைப்பும் 20 சதவீத கூடுதலான எண்ணிக்கையுடன் அனுப்பப்பட்டுள்ளது.
அதே எண்ணிக்கையில் மீண்டும் ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டும் கூடுதலாக அனுப்ப உள்ளனர்.

