/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பள்ளி 200 மாணவர்கள் 'நீட்' தேர்வில் தகுதி
/
அரசு பள்ளி 200 மாணவர்கள் 'நீட்' தேர்வில் தகுதி
ADDED : ஜூன் 06, 2024 05:34 AM
மதுரை : மதுரையில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' நுழைவுத் தேர்வில் தகுதி பெற்று பெற்றனர்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 405 பேரும், உதவிபெறும் பள்ளிகளில் 127 பேர் என மொத்தம் 532 பேருக்கு அரசு கோச்சிங் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவுகள் வெளியிடப்பட்டதில் அதிகபட்சமாக சுந்தரராஜன் மாநகராட்சி பள்ளி மாணவி ரக் ஷனா720க்கு 612 மதிப்பெண்கள் பெற்றார்.
அடுத்து நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷினி மீனாட்சி 574, சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காயத்ரி 548, முத்து சங்கீதா 502 மதிப்பெண்கள் பெற்றனர்.
இந்தாண்டிற்கு ஓ.பி.சி.,எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு 129, பொதுப் பிரிவினருக்கு 164 தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இத்தேர்வு எழுதிய200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுஉள்ளனர்.
மாணவர்களை சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தேவி, பாடஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், மோசஸ் பாக்கியராஜ், மணிகண்டன், ஞானகுரு, மெர்லின், ஜெசிந்தா பாராட்டினர்.