ADDED : மார் 31, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தொகுதியில் மார்ச் 28 வரை 41 பேர் மனுத்தாக்கல் செய்தனர். பரிசீலனையில் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் 9 கட்சி வேட்பாளர்கள், 12 சுயேச்சைகள் களத்தில் இருந்தனர். வேட்பு மனுவை நேற்று மதியம் 3:00 மணி வரை யாரும் வாபஸ் பெறாததால் 21 பேர் போட்டியிடுவது உறுதியானது. அதன் பின் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. 16 பேருக்கு மேல் போட்டியிடுவதால் கூடுதலாக ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும்.
பின்னர் தேர்தல் அதிகாரி சங்கீதா தலைமையில் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நேர்முக உதவியாளர் கண்ணன், தாசில்தார் ேஹமா பங்கேற்றனர்.

