ADDED : ஆக 01, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: இளைஞர்கள், விளையாட்டு வீரர்களிடையே பாக்ஸ் கிரிக்கெட்டை ஊக்குவிக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் இளைஞர் விளையாட்டு அரங்கம் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. மதுரை ரேஸ்கோர்ஸில் ரூ.42 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அரங்கை அமைச்சர் நிர்மல்குமார் திறந்து வைத்தார். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் முன்னிலை வகித்தனர்.
இந்த அரங்கு 24 மணி நேரமும் செயல்படும். இதற்கான ’டர்ப் டவுன்’ செயலியில் முன்பதிவு செய்து ஒரு மணி நேரம் விளையாட ரூ.826 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் கல்லாணை, தங்கப்பாண்டி, கார்த்திகேயன், விஜய், துணைமேயர் நாகராஜன் பங்கேற்றனர்.
