ADDED : செப் 02, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு 2013 பேட்ச் போலீசார் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
பணியின் போது உடல்நலக் குறைவாலும், எதிர்பாராத விபத்துகளாலும் போலீசார் சிலர் இறக்கின்றனர். அவர்களின் குடும்பச் சூழ்நிலை, பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 2013ல் பணியில் சேர்ந்த போலீசார் வாட்ஸ்ஆப், டெலிகிராமில் குழு அமைத்து நிதி திரட்டி வருகின்றனர்.
அவ்வாறு திரட்டப்பட்ட நிதியில் இருந்து, மதுரையில் விபத்தில் இறந்த ஆயுதப்படை வாகனப்பிரிவு முதல் நிலை போலீஸ்காரர் காளிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியை நேரில் சென்று கொடுத்தனர். குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.