/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2587 கி.மீ., லைனுக்கு ரூ.3346 கோடி: சோமண்ணா மத்திய அமைச்சர் பேச்சு
/
2587 கி.மீ., லைனுக்கு ரூ.3346 கோடி: சோமண்ணா மத்திய அமைச்சர் பேச்சு
2587 கி.மீ., லைனுக்கு ரூ.3346 கோடி: சோமண்ணா மத்திய அமைச்சர் பேச்சு
2587 கி.மீ., லைனுக்கு ரூ.3346 கோடி: சோமண்ணா மத்திய அமைச்சர் பேச்சு
ADDED : செப் 01, 2024 03:24 AM

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அமைச்சர் சோமண்ணா துவக்கி வைத்தார்.
வெங்கடேசன் எம்.பி., பா.ஜ. பொதுச் செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பேசுகையில், மதுரை - பெங்களூரு இடையிலான 586 கி.மீ., துாரத்தை 8 மணி நேரத்தில் ரயில் கடந்து செல்வது சாதனையான விஷயம்'' என்றார்.
மத்திய அமைச்சர் சோமண்ணா பேசியதாவது: கோயில் நகரமான மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி. தமிழகம் கலை, கலாசார, ஆன்மிக மையமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி தொழில் துறையிலும் பொருளாதாரத்திலும் சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக ரயில்வே துறை உள்ளது. 2009 - 2014 ம் ஆண்டில் மத்திய அரசு தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சிக்கு ரூ.875 கோடி வழங்கியது. 504 கி.மீ., நீளத்திற்கு ரயில்வே லைன் மின்மயமாக்கப்பட்டது.
2014 - 2024 காலகட்டத்தில் 2150 கி.மீ., நீளத்திற்கு மேலாக ரயில்வே லைன் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2024 - 25 ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வேக்கு ரூ.6362 கோடி ஒதுக்கப்பட்டது சாதனை.
தமிழகத்தில் 22 திட்டங்களில் 2587 கி.மீ., ரயில்வே லைனுக்கு ரூ.3346 கோடி செலவிடப்பட்டுள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷன்கள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. 77 ஸ்டேஷன்கள் கண்டறியப்பட்டு 62 ஸ்டேஷன்களில் பணிகள் வேகமாக நடக்கின்றன.
புதிய வந்தே பாரத் ரயில் மூலம் மதுரை - பெங்களூரு பயணம் மேற்கொள்பவர்கள், ஐ.டி., பணியாட்கள் பயனடைவர்.
பாம்பன் ரயில்வே பாலம் திறப்பது குறித்து ஆய்வுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.