ADDED : மே 10, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் சுரேஷ், கூடலழகர் கோயில் உதவி கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கம் ரூ.28 லட்சத்து 78 ஆயிரத்து 855, தங்கம் 117 கிராம், வெள்ளி 1,342 கிராம் கிடைத்தது.