ADDED : செப் 07, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 8 விவசாயிகளின் 12 ஆயிரத்து 297 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 14 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.7.50 முதல் ரூ.16.35 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.1 லட்சத்து 57ஆயிரத்து 848க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 20 விவசாயிகளின் 2919 கிலோ கொப்பரை ஏலத்தில் 7 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.103 வரை விலை போனது. ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 865க்கு வர்த்தகம் நடந்தது.