ADDED : ஆக 20, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சோலையழகுபுரம் 3வது தெரு பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உமையகுமார் என்ற பெரிய எலி 24, கொலை முயற்சி வழக்கில் கண்காணிப்பில் இருந்தார். பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்.
இதேபோல மதுரை கரிமேடு அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அழகம்மாள் கஞ்சா விற்று, பொது ஒழுங்கிற்கு பாதகமாக இருந்தார். அருள்தாஸ்புரம் களத்துப்பொட்டல் பகுதியைச் சேர்ந்த முத்துவும் 36, கஞ்சா விற்பனை செய்து வந்தார். இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

